நம்பர் நடிகையை ‘குஞ்சுமணி’ என அழைக்கும் நடிகர்!


நம்பர் நடிகையை ‘குஞ்சுமணி’ என அழைக்கும் நடிகர்!

நம்பர் நடிகை என்று சொன்னால் கண்டிப்பாக நீங்கள் குழம்பி போவீர்கள். திருமணம் வரை சென்றது இவரது காதல் என்று சொன்னாலும் குழப்பம்தான். சின்ன நம்பர் நடிகை என்று கூறினால் சட்டென்று புரிந்து கொள்வீர்கள். இவர் நேற்று (ஜூலை 10) வெளியான ஒரு பட டீஸருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

ஒரு மதுபானத்தின் பெயரை கொண்டது அப்படம். படத்தின் நாயகனின் 25வது படம் என்பதால் அவரே இப்படத்தை தயாரித்துள்ளார். இந்நிலையில் இப்படத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவிக்க சின்ன நம்பர் நடிகையும் ட்வீட் செய்திருந்தார். இதற்கு பதிலளித்த அந்த பிரியாணி விருந்து நடிகர் கூறியதாவது… “மிக்க நன்றி குஞ்சுமணி. லவ் யூ..” என்று செல்லமாக குறிப்பிட்டுள்ளார்.

தற்போது சின்ன நம்பர் நடிகையின் செல்ல பெயர் குஞ்சுமணி என தெரிந்ததால் ரசிகர்கள் நடிகையை கிண்டலடிக்க ஆரம்பித்துவிட்டனர்.