‘சின்ன பூ’ நடிகையை “இளவரசி” என்று அழைக்கும் நடிகர்


‘சின்ன பூ’ நடிகையை “இளவரசி” என்று அழைக்கும் நடிகர்

பூ நடிகையை போன்று புஷ்டியாக இருப்பதால், அந்த இளம் நடிகையை சின்னப்பூ என்று அழைக்கத் தொடங்கினர். அவரும் பூ நடிகை ரேஞ்சுக்கு நமக்கு ஒரு கோயில் கட்ட மாட்டார்களா? என்ற எண்ணத்தோடு மிக வேகமாக முன்னேறி வருகிறார்.

சமீபத்தில் பூ நடிகையின் கணவர் ஒரு மேடையில், தன்னுடைய “லக்கி ஹீரோயின் இந்த சின்னப்பூ நடிகை” என்று புகழவே மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார் இவர்.

இந்நிலையில், இம்சை அரச இயக்குனர் இயக்கத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு சமயங்களில் தளபதி நடிகர் தன்னை இளவரசி என்று அழைப்பதை மிக பெருமையாக கூறி வருகிறார்.

அந்தப்படத்தில் இளவரசி வேடம் ஏற்பதால் தளபதி நடிகர் தன்னை அப்படி அழைக்கிறார் என்பது அம்மணிக்கு தெரியாது போல…