குல்பியுடன் செஃல்பி; கிறுக்கல் நாயகனின் கிண்டல்!


குல்பியுடன் செஃல்பி; கிறுக்கல் நாயகனின் கிண்டல்!

தமிழ் சினிமாவில் எதையும் வித்தியாசமாக செய்து மற்றவர்களை வசியப்படுத்தும் வித்த’GUN’ அவர். சிறு சிறு வேடங்கள் உதவி இயக்குனர் என பல வேஷம் கட்டிய இவர் தன் ‘புதிய பாதை’ மூலம் சினிமாவில் தனக்கான ஒரு வழியை கண்டு கொண்டார். பின்னர் ‘பொண்டாட்டி தேவை’ என்று புதிய பாதையின் நாயகியை அவர் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர் தன் குருநாதரான முருங்கைகாய் சமாச்சாரம் ஸ்பெஷல் இயக்குனர் மகன் திருமண விழாவில் கலந்து கொண்டார். திரையுலகினர் பலரும் அதில் கலந்து கொண்டனர். ரசிகர்கள் கோயில் கட்டிய அந்த பூ நடிகையும் இதில் கலந்து கொண்டார்.

இவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது நாம் அறிந்ததே. இந்த விழாவில் இவர்கள் இருவரும் இணைந்து தங்கள் மொபைலில் ஒரு செல்பி எடுத்து கொண்டனர். அந்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவு செய்த அந்த கிறுக்கல் நாயகன் ‘குல்பியுடன் ஒரு செல்ஃபி’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அடடே… ஓர்… ஆச்சரியக்குறி…