வருங்கால கணவருடன் இணைந்து முன்னாள் காதலனுக்கு பார்ட்டி கொடுத்த நடிகை


வருங்கால கணவருடன் இணைந்து முன்னாள் காதலனுக்கு பார்ட்டி கொடுத்த நடிகை

தமிழில் அறிமுகமாகி பத்து வருடங்களுக்கு மேலாக இன்றும் முன்னணி நடிகையாக இருப்பவர் நம்பர் நடிகை. இவர் வம்பு நடிகருடன் காதல் வயப்பட்டதாக கிசுகிசுக்கப்பட்டார். அதன்பின்னர், கோச்சாடையான் படத்தில் இறுதிகாட்சியில் வரும் ஒரு கேரக்டர் பெயரை கொண்ட நடிகருடன் நெருக்கமாக இருந்தார். எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாவே சென்றனர்.

இருவரின் காதல் பற்றி கிசுகிசுக்காத மீடியாக்களே இல்லை எனலாம். இருவரும் காதலிக்கிறார்கள் விரைவில் திருமணம் என்றெல்லாம் செய்திகள் வந்தன.

இந்நிலையில் வேறு ஒரு தயாரிப்பாளருடன் காதல், நிச்சயதார்த்தம் என்று ட்வீட் செய்து பழைய காதல் கதைகளுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தார் நடிகை.

தற்போது, தன் வருங்கால கணவருடன் இணைந்து தன் முன்னாள் காதலருக்கு கோவாவில் பார்ட்டி கொடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது பார்ட்டியா? இல்ல பை..பை.. ட்ரீட்டா?