சுறாவுடன் நடிக்க மறுத்த நயன நடிகை


சுறாவுடன் நடிக்க மறுத்த நயன நடிகை

நவீன மௌனராகம் படத்தை எடுத்த அந்த பிரம்மாண்ட இயக்குனரின் சீடர் தன் ஒரே பட வெற்றியின் முலம் ப்ரியமான நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

படத்தில் பணிபுரிந்த போது கிடைத்த நயனத்தின் நட்பின் காரணமாக சுறாவின் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பு பெற்றுத் தந்த நயனம் படத்தில் இல்லாமலா? என்று பலர் பேசிக் கொண்டிருக்க, அவரோ, தன்னை தேடி வந்த ஜாக்பாட்டை திருப்பி அனுப்பி விட்டார்.

இடையில் என்ன நடந்ததோ? நயன நடிகை படத்தில் இருந்து விலகிவிட்டார். ஒரு இளம் கதாநாயகியை வலைவீசி தேடி கொண்டிருக்கிறார்களாம் படக்குழுவினர்? நிறைய மீன்கள் காத்திருந்தாலும், சுறாவுக்கு பிடித்த மீன் எதுவோ? அதுவே அகப்படும்.