‘ஆனந்த’ நடிகைக்கு சென்னையில் தங்க பேரானந்தமாம்!


‘ஆனந்த’ நடிகைக்கு சென்னையில் தங்க பேரானந்தமாம்!

இன்ஜினியர் படத்தில் அறிமுகமானாலும் அந்த மூன்றெழுத்து படமே ஆனந்த நடிகைக்கு பெயரை பெற்றுத் தந்தது. இவர் ஆந்திராவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர். இவர் சமீபத்தில் ஒரு வீரனுடன் அலுங்கி குலுங்கிய பாடல் ஹிட்டடித்தது. இந்தப் பாடல் மற்றும் படத்தில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது.

தற்போது டார்லிங் நாயகனுடன் இவர் நடித்துள்ள படம் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. மேலும் இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. எனவே, சென்னையிலேயே செட்டிலாகி விடலாமா? என யோசித்து வருகிறாராம். படப்பிடிப்பு மற்றும் பட புரோமோஷன்களுக்கு அடிக்கடி ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்து செல்ல வேண்டி இருப்பதால் இங்கேயே இருக்கிற வாய்ப்புகளை பற்றிக் கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளாராம்.

அதுமட்டுமில்லாமல் தமிழக ரசிகர்களையும் சென்னையும் இவருக்கு ரொம்ப பிடித்து விட்டதாம். எனவேதான் இந்த முடிவுக்கு வந்துள்ளார் இந்த ஆனந்த நடிகை.

வந்தாரை வாழவைக்கும் தமிழகம் இவரை மட்டும் விட்டுவிடுமா என்ன?