நயன நடிகையை அடுத்து ‘சின்ன பூ’ உடன் ஜீவ நடிகர்!


நயன நடிகையை அடுத்து ‘சின்ன பூ’ உடன் ஜீவ நடிகர்!

சூப்பர் தயாரிப்பாளரின் இளையமகன் ‘ஜீவ’ நடிகர் நடித்து சமீபத்தில் வெளியான படங்கள் தோல்வியை சந்தித்து வருகிறது. எனவே தன்னுடன் நடிக்கும் மற்ற கலைஞர்கள் முக்கியமாக ஹீரோயின்ஸை இவரே தேர்ந்தெடுத்து வருகிறாராம். இனிமேல் தன்னுடைய படங்களில் மார்க்கெட் இல்லாத நடிகையோ அல்லது புதுமுக நடிகைகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டாம் என கண்டிப்பாக கூறிவிட்டாராம்.

மார்க்கெட் உள்ள நடிகையாக இருந்தால் படத்தின் வெற்றிக்கு அவர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என அவர் நினைப்பதே இதற்கு காரணமாம். சமீபத்தில் பண்டிகை நாள் என்ற பெயர் கொண்ட ஒரு படத்தில் பெரிய நம்பர் நடிகையுடன் ஜோடி சேர்ந்தார். இப்படத்தில் டீச்சர் வேடத்தில் அந்த நயன நடிகை நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தான் அடுத்து நடிக்கும் ஒரு படத்தில் மில்கி ஒயிட் நடிகையான அந்த சின்ன பூ நடிகையுடன் இணையவுள்ளாராம். சின்ன பூ நடிகையும் இந்த ஜீவ நடிகருடன் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டாராம்.