ஒரு படத்திற்கு ஒரு கோடி கேட்கும் காமெடி நடிகர்!


ஒரு படத்திற்கு ஒரு கோடி கேட்கும் காமெடி நடிகர்!

கோலிவுட்டில் நிறைய காமெடி நடிகர்கள் இருக்கிறார்கள்…. (மன்னிக்கவும்..) இருந்தார்கள்… தற்போது வைகை புயல், சின்ன கலைவாணர், காமெடி சூப்பர்ஸ்டார் என ஒவ்வொரும் ஹீரோவாக நடிக்க சென்றுவிட்டனர். காமெடி வேடத்திற்கான கால்ஷீட் கேட்டால்… ஹீரோவாகவே மட்டும் நடிப்போம். ‘இனிமே இப்படித்தான்’ என்கின்றனர்.

அந்த பரோட்டா நடிகரோ படுபிஸியாகி விட்டார். மேலும் அந்த காமெடியான ஆந்தை கண் நடிகரும் பிஸியாகி விட்டாராம். துக்க செய்தி போஸ்டர் படத்தில் ஹீரோவாக நடித்து கொண்டிருக்கிறார். இவர்களின் கால்ஷீட்டுகள் ஒவ்வொரு நாளாக கணக்கிடப்படுகிறது. தினமும் லட்சக்கணக்கில் சம்பளத்தை கேட்கின்றனர்.

எனவே இதற்கு பயந்து தயாரிப்பாளர்கள் இவர்களை ஒப்பந்தம் செய்ய தயங்கி வருகின்றனர். கோலிவுட்டில் காமெடி நடிகர்கள் செய்து வரும் காமெடியை பார்த்த டோலிவுட் காமெடியன் ஒருவரும் தன் சம்பளத்தை லட்சக்கணக்கில் கேட்க ஆரம்பித்து விட்டாராம்.

ரஜினியின் ‘லிங்கா’ படத்தில் ஒரு காட்சியில் மட்டுமே நடித்து ‘பிரம்மாத’மாக அசத்தியிருந்தார். ஒரு பிரபல சாமியாரின் பெயர் கொண்ட இவர் தெலுங்கில் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருந்தார். தயாரிப்பாளர் 30 நாள் கால்ஷீட் கேட்டதற்கு “ஒரு கோடி கொடுங்கள், நடித்து தருகிறேன்” என்றாராம். இதுவே தற்போது டோலிவுட்டில் காமெடியாக (ஸாரி) சீரியஸாக பேசப்பட்டு வருகிறதாம்.