‘கிக்’ டைரக்டர்கிட்ட ஸ்டோரி ஸ்டாக் இருக்காம். யாருக்கு வேணும்?


‘கிக்’ டைரக்டர்கிட்ட ஸ்டோரி ஸ்டாக் இருக்காம். யாருக்கு வேணும்?

சரக்குடன் வாட்டர மிக்ஸ் பண்ணின்னா அது ஒரு கிக்தான்… அதுபோல சரக்குடன் காமெடிய மிக்ஸ் பண்ணினா.. அதான் நம்ம படம் என்று சொல்லாமல் செய்து வருகிறார் அந்த ராஜ டைரக்டர்.

இவர் அனுப்பிய எஸ்எம்எஸ்… ஸாரி.. இவர் எடுத்த எஸ்எம் படம் செம ஹிட்டடிக்கவே தொடர்ந்து அந்த பாணியை பின் பற்ற ஆரம்பித்து விட்டார். அப்புறம் என்ன? எல்லாத்துலயும் பாஸ் என்கிற அளவுக்கு வளர்ந்தார். பெரிய அரசியல் வாரிசுடன் இவர் இணைந்த படமும் ஓகே ஓகே ஆனதால் மனிதர் படு குஷியானார்.

ஆனால் அதன்பின்னர் வந்த படங்கள்தான் இவருக்கு காலை வாரி விட்டது எனலாம். ஆன் இன் ஆளும், சரக்கு படமும் இவருக்கு பலத்த அடியை கொடுக்கவே மனிதர் உடைந்தான் போனார்.

எனவே கொஞ்ச நாளைக்கு டைரக்ஷன் ஸ்டாப். வேனுமின்னா ஸ்டோரி மற்றும் டயலாக் எழுதி தர்றனேன். அப்படின்னு முடிவு எடுத்துவிட்டாராம். யாருக்காச்சும் வேனுமின்னா இவரோ அப்ரோச் பண்ணலாம்.

இருந்தாலும் இப்போ ஒரு கிக் படத்தை எடுக்கவிருக்கிறார். அதுவாச்சும் இவர KICK பண்ணாம இருக்கட்டும்.. சாமியோவ்….