வெள்ளித்திரையில் இணையும் முன்னாள் டி.வி. ஸ்டார்ஸ்


வெள்ளித்திரையில் இணையும் முன்னாள்  டி.வி. ஸ்டார்ஸ்

ஒரு பிரபல தமிழ் தொலைக்காட்சியிருந்து வந்த இரண்டு நட்சத்திரங்கள் இன்று வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருக்கின்றன. இருவரும் ஒரே குழுமத்தில் இருந்து வந்தாலும் இதுவரை இணைந்து நடித்ததில்லை.

சினிமாவில் வளர்ந்து வரும் நிலையில் இதுபோன்ற ஈகோ தேவையா என்று பலர் சொல்லியும் செவி கொடுக்காமல் இருந்து வந்த இவர்கள் இப்போது இணைய உள்ளனர். ஈயை விரட்டுவது போல், ‘ஈ’GO என்று கூறி ஒரு புதிய படத்திற்காக ஒப்பந்தமாகி உள்ளனர்.

ஒருவர் தல தளபதி ரேஞ்சுக்கு சம்பளம் பெறுபவர். மற்றொருவர் ஹீரோவாக நடித்தாலும் அதிகபட்ச படங்களில் ஹீரோக்களின் நண்பராக லொள்ளு செய்து நடிப்பவர். சமீபத்தில், தேசிய கட்சியில் இணைந்த பிரபல நடிகையின் கணவர் இயக்கும் படத்தில் சேர்ந்து நடிக்கின்றனர் இவர்கள் இருவரும்.

ஒருவேளை படத்தின் கேரக்டர்களில் ஈகோ இருக்குமோ? என்னவோ? அது சுந்தரமான இயக்குனருக்கே வெளிச்சம்.