புதிய டிவி சேனல் தொடங்குகிறார் நட்சத்திர நடிகர்!


புதிய டிவி சேனல் தொடங்குகிறார் நட்சத்திர நடிகர்!

தெலுங்கு திரையுலகில் பிரபலமான ஒரு நடிகர் புதிய டிவி சேனல் ஒன்றை துவங்க இருக்கிறாராம். இவரின் மனைவியான அந்த முன்னாள் நடிகை மிருகங்கள் மீது பாசம் காட்டுவதிலும் பராமரிப்பதிலும் மிகுந்த ஈடுபாடு உள்ளவர். இவரின் மகனும் தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார்.

இந்நிலையில் அந்த பிரபல நடிகர் தற்போது சூர்ய நடிகரின் தம்பியுடன் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகிவரும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு திரையுலகில் பெரிய நட்சத்திர குடும்பத்தைச் சேர்ந்த இவர் தற்போது டி.வி.சேனல் துவங்க தீவீரமாக திட்டம் தீட்டி வருகிறார்.

இவர், இவரது தந்தை, இவரது மகன் உள்ளிட்டோர் நடித்து இவர்களது குடும்ப தயாரிப்பான ஒரு படம் அண்மையில் வெளியானது. அந்தப் படத்தின் பெயரையே தற்போது உருவாக இருக்கும் சேனலுக்கும் சூட்டவிருப்பதாக தெரியவந்துள்ளது.

ஏற்கெனவே இவர் தெலுங்கு மொழியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘மா’பெரும் டி.வியில் ஒரு நிறுவனராக பொறுப்பு வகித்தார். தற்போது அதன் பங்குகளை வேறு ஒரு நட்சத்திர குழுமம் வாங்கிவிட்டதால் இவர் இந்த புதிய சேனலை துவங்க இருக்கிறாராம்.