‘உயரமான நடிகர்களுடன் மட்டுமே…’ திவ்ய நடிகையின் ஆசை!


‘உயரமான நடிகர்களுடன் மட்டுமே…’  திவ்ய நடிகையின் ஆசை!

கவலைக் கொள்ளாத இளைஞர் சங்க படத்தில் அறிமுகமான ‘அந்த’ நடிகை தற்போது தமிழில் முன்னணி நடிகையாகிவுள்ளார்.  லட்சங்களில் சம்பளம் வாங்கி கொண்டிருந்த இவர் கோடிகளை நெருங்கும் தூரம் வெகு தொலைவில் இல்லை. இதுவரை இவர் நடித்து வெளியாகியுள்ள தமிழ் திரைப்படங்களில் இவருடன் ஜோடியாக நடித்த நாயகர்கள் அனைவரும் நல்ல உயரம் கொண்டவர்களே.

தற்போது பயங்கரமான ஓர் ஆயுதத்தின் பெயரை கொண்ட ஒரு படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் கதாநாயகனும் உயரமான நடிகர்தான். அவர்  வேறு யாருமல்ல திரைப்படங்களில் காதலை சொல்லாமல் காத்திருந்த நடிகரின் மகன்தான்.

இதுகுறித்து திவ்யமான நடிகையிடம் கேட்டபோது “உயரமான ஹீரோக்களுடன் மட்டுமே சேர்ந்து நடிப்பதன் காரணம் என்ன? என்று கேட்டதற்கு… “நீங்க சொல்லித்தான் நானே அதை நினைத்துப் பார்க்கிறேன். இது எல்லாம் தானாக அமைந்தது. எதுவும் திட்டமிட்டு செய்யவில்லை”  என்றார்.

இந்நிலையில்… கர்நாடக தலைநகர் பெயரை கொண்ட ஒருபடம்  மலையாளத்தில் ஹிட்டடித்தது. தமிழில் அப்படத்தின் ரீமேக் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.  இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிப்பவரும் உயரமானவர்தான். அவர் சின்ன நம்பர் நடிகையின் முன்னாள் காதலர் என்பது குறிப்பிடத்தக்கது.