ப்ரியமான சந்தோஷ நடிகையுடன் காமெடியன் நெருக்கம்!


ப்ரியமான சந்தோஷ நடிகையுடன் காமெடியன் நெருக்கம்!

பிரபல காமெடி வசனகர்த்தாவிடம் உதவியாளராக பணிபுரிந்தவர் இன்று தமிழ் சினிமாவில்  ஒரு காமெடி நடிகராக வளர்ந்து கொண்டிருக்கிறார். நிறைய குறும்படங்கள் மற்றும் மேடை நாடகங்களில் நடித்த அனுபவம் உள்ளவர் இவர்.

டிவியில் இருந்து விடைபெற்று இன்று முன்னணி நடிகர்களின் வரிசையில் இணைந்திருக்கும் அந்த சிவமான நடிகருடன் நட்பு பாராட்டி வருபவர். இவர்கள் இருவரும் இணைந்து விட்டால் அவ்வளவுதான். அந்த இடத்தில் எவர் வந்தாலும் கலாய்த்து விடுவர். இவை மட்டுமில்லாமல் ஹீரோக்களின் நண்பராகவும் நிறைய படங்களில் தலை காட்டி வருகிறார். (ஸாரி) நடித்து வருகிறார்.

இந்நிலையில் சுள்ளான் நடிகர் தயாரிப்பில் அந்த டிவி நண்பருடன் ஒரு படத்தில் பணிபுரிந்தபோது அப்பட ஹீரோயினுடன் நெருக்கம் காட்டி வந்தார். அப்படத்தில் இவர் டைலராக நடித்திருந்தார். இப்போது உச்ச நட்சத்திரத்தின் மூத்த மகள் இயக்கும் படத்தில் நடித்தபோது மீண்டும் அதே நடிகையுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இப்படத்தில் நடிகைக்கு நிறைய காமெடி டிப்ஸ் சொல்லி கொடுத்தாராம் இவர். இவரின் காமெடி வசனங்களும் டைமிங் காமெடிகளும் நடிகையை கவர்ந்து விட்டதால் படப்பிடிப்பு இல்லாத சமயங்களிலும் இருவரும் நெருங்கி பழகி வருகின்றனராம்.