‘ஒல்லி இல்லன்னா குண்டு இசைதான் வேணும்’ – ரைஸிங் ஸ்டார்


‘ஒல்லி இல்லன்னா குண்டு இசைதான் வேணும்’ – ரைஸிங் ஸ்டார்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு வந்தவர் அவர். தற்போது டாப் ஹீரோக்களுக்கே சவால் விடும் வகையில் வளர்ந்து வருகிறார். இவரது ரசிகர்கள் இவரை செல்லமாக ரைஸிங் ஸ்டார் என்று அழைத்து வருகின்றனர். சூப்பர்ஸ்டாரின் பெயரை கொண்ட இவரது படம் தற்போது வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. இதில் இவருக்கு ஜோடியாக முன்னாள் நடிகையின் மகளும் கேரளத்து பைங்கிளியுமான ஒருவர் அறிமுகமாகிறார்.

இந்நிலையில் இந்த நடிகர் தற்போது இவரின் நண்பரின் பேனரில் நடிக்கவிருக்கிறார். 24 மணிநேரம் கொண்ட அந்த பேனர் படத்திற்கு தற்போது வரை பெயரிடப்படவில்லை. ஆனால் பிரபல தொழில்நுட்ப கலைஞர்கள் பலரும் பணியாற்றவிருக்கின்றனர். இப்படத்திற்கு மிகவும் ஒல்லியான இசையமைப்பாளர் இசையமைக்கவிருக்கிறார்.

இந்த ரைஸிங் ஸ்டாரின் சமீபத்திய படங்களுக்கு இந்த ஒல்லி அல்லது குண்டு இசையமைப்பாளர் ஆகியோரே மாறி மாறி இசையமைத்து வருகின்றனர். இதுபற்றி விசாரித்தால் இந்த இருவரில் ஒருவர்தான் தன் படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்கிறாராம். இதனை மீறி இயக்குனர் ஏதாவது பேசினால் இயக்குனரை மாற்றி விடுவேன் என்கிறாராம் இந்த ரைஸிங் ஸ்டார்.