எல்லாம் நிதியின் மாயமா? மச்சமா?


எல்லாம் நிதியின் மாயமா? மச்சமா?

அரசியல் தலைவரின் மகனான, நிதி கொண்ட உதய நடிகருக்கு, உடம்பில் நிறைய மச்சம் இருக்கிறதா என்று தெரியவில்லை. தன் முதல் அறிமுக படத்திலேயே வம்பு நடிகரின் முன்னாள் காதலியுடன் கரம் கோர்த்தார். பின்னரும் அதே நடிகரின் முன்னாளுக்கும் முன்னாள் காதலியுடன் இரண்டு படங்களில் நடித்தார்.

தற்போது பிரம்மாண்ட படத்தில் நடித்த அந்த சிக்கென்ற அந்த அயல்நாட்டு அழகி நடிகையுடன் கரம் கோர்த்துள்ளார். இவருக்கு மட்டும் எப்படி முன்னணி நடிகைகளின் கால்ஷீட் கிடைக்கிறதோ என்று புலம்புகின்றனர் அவரது சகாக்கள். எல்லாம் நிதி செய்யும் மாயம்தான் போலும். இன்னும் பெயர் வைக்காத அந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி விட்டது. ஹனியான இளம் இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்திருந்தனர். என்ன காரணமோ? இப்போது அவர் விலகிவிட்டார்.