ஸ்வீட் நடிகையின் பலம் எது? பலவீனம் எது?


ஸ்வீட் நடிகையின் பலம் எது? பலவீனம் எது?

தமிழ் மற்றும் தெலுங்கில் டாப் ஸ்டார்களுடன் நடித்து வருபவர் அந்த ஸ்வீட் பெயரை கொண்ட நடிகை. தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகிவரும் ஒரு பிரம்மாண்ட படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டாருடன் நடித்து வருகிறார்.

தன்னுடைய பலம் எது? பலவீனம் எது? என்பதை இவரே தெரிவித்து இருக்கிறார்.

என்னை பற்றி சிந்திப்பதை விட நான் மற்றவர்களை பற்றியே அதிகம் சிந்திக்கிறேன். இதிலிருந்து விடுபட வேண்டும் என நானே விரும்பினாலும் அது முடியவில்லை. இதுவே என் பலவீனமாக கருதுகிறேன்.

ஆனால் நான் ஒரு விஷயத்தை முடிவு செய்துவிட்டால், அதை முடிக்கும்வரை அதிலிருந்து விலக மாட்டேன். சினிமாவும் சில மொழிகளும் தெரியாத காலத்திலும் சினிமாவில் சாதிக்க விரும்பினேன். அதனால்தான் என்னால் இப்போது சினிமாவில் நிலைக்க முடிகிறது. இதுவே என் பலம் என்கிறார் அது ஸ்வீட் நடிகை.