மாமனாரை லுக் விட்ட மருமகள்; டிரைலரை தடுக்கும் பால் நடிகை!


மாமனாரை லுக் விட்ட மருமகள்; டிரைலரை தடுக்கும் பால் நடிகை!

கேரளாவில் இருந்து வந்த அந்த பால் நடிகை, கடவுள் இயக்குனரின் படத்தில் நடித்து சர்ச்சைக்குள்ளானார். காதல் திருமணம் செய்து தன் கணவரை கல்லூரிக்கு அனுப்பி விட்டு வீட்டில் மாமனாருடன் இணைந்து இருப்பதாக அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டு இருக்கும். படம் இளசுகளிடம் வரவேற்பை பெற்றாலும், பலத்த சர்ச்சைக்குள்ளாகியது.

தமிழில் வந்த இப்படத்தின் மூலம் எல்லோராலும் அறியப்பட்டார். அதன் பின்னர் இவர் நடித்த படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. பின்னர் முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து பாப்புலராகி கொண்டிருந்த சமயத்தில் பிரபல இயக்குனரை காதல் திருமணம் செய்து செட்டிலாகி விட்டார். இருந்தபோதிலும் அவ்வப்போது ஒரு சில படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், கடவுள் இயக்குனரின் புதிய படம் ஒன்று வெளியாகவுள்ளது. தன் குட்டியை தன் அடிவயிற்றில் சுமக்கும் ஒரு மிருகம் பெயரை கொண்ட படம் வெளிவரவுள்ளது. இதற்கான பட விளம்பரங்களில் தனது முந்தைய படைப்புகளின் பெயரை பயன்படுத்துகிறார். அதுபோல வெளிவரவிருக்கும் இப்படத்தின் டிரைலர் காட்சிகளில் பால் நடிகை நடித்த அந்தப் படத்தின் காட்சிகளையும் பயன்படுத்த இருக்கிறாராம்.

இந்த டிரைலர் வெளியானால் தன் இமேஜ் பாதிக்கப்படும் என்பதால் விளம்பர முன்னோட்டம் வெளிவரும் முன்பே அதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறாராம் பால் நடிகை.