மில்கி ஒயிட்டும் சின்ன நம்பர் நடிகையும் செம பைட்?


மில்கி ஒயிட்டும் சின்ன நம்பர் நடிகையும் செம பைட்?

பூ நடிகையின் கணவரும் பிரபல சுந்தரமான இயக்குனருமான அவர் தற்போது பங்களா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். முதல் பாகம் வெற்றியடைந்ததால அப்படத்தில் நடித்த மில்க் ஒயிட் நடிகையை இப்படத்தில் மீண்டும் நடிக்க வைத்துள்ளார். தற்போது இந்த இயக்குனர் படங்களில் மில்க் ஒயிட் நடிகை தொடர்ந்து நடித்து வருகிறார் என்பது நாம் அறிந்ததே.

இந்நிலையில் புதிதாக இக்கூட்டணியில் இணைந்து ‘பங்களா-2’ படத்தில் நடித்து வருகிறார் சின்ன நம்பர் நடிகை. நம்பர் நடிகை சீனியர் நடிகை என்பதால் படப்பிடிப்பில் அவருக்கு முக்கியத்துவம் தரப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் மில்க் ஒயிட் நடிகை மிகவும் அப்செட்டில் இருக்கிறாராம்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் இருவரும் எதிரும் புதிருமாக நடந்து கொண்டு பேசிக்கொள்வதில்லையாம். இவர்கள் இருவருமே படத்தில் தங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்றும் தங்களுக்கு நிறைய காட்சிகள் இருக்கவேண்டும் என டைரக்டரை நச்சரித்து வருகிறார்களாம். இதனால் படம் முடியும் வரை இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள வேண்டியதுதான் என்பதில் உறுதியாக இருக்கிறாராம் இயக்குனர்.