இயக்குனர் பெயரில் சொத்துக்கள் வாங்கிய நம்பர் நடிகை!


இயக்குனர் பெயரில் சொத்துக்கள் வாங்கிய நம்பர் நடிகை!

கடந்த செப்டம்பர் மாதம் இறுதிநாளில் தமிழ் திரையுலகின் பிரபலமான நடிக, நடிகைகள் மற்றும் தயாரிப்பாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டனர். இதனால் அடுத்த நாள் வெளியாகவிருந்த தளபதி நடிகரின் படம் தாமதமானது தாங்கள் அறிந்ததே.

இவர் மட்டுமில்லாமல் இவருடன் டூயட் பாடிய இரண்டு நடிகைகள் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அதில் பெரிய நம்பர் நடிகை வீட்டில் ரெய்டு நடந்தபோது அவர் வாங்கிய சொத்துக்கள் சிலது இயக்குனர் பெயரில் இருந்ததாம். அது அவருடைய மாஜி காதல் இயக்குனரா? அல்லது புதிய காதல் இயக்குனரா? என்று கேட்டு விடாதீர்கள்.

எல்லாம் புதியதுதான். இவர்கள் இணைந்து பணியாற்றிய புது படம் கூட விரைவில் வெளியாகவுள்ளது. மேலும் அந்த இயக்குனருடான காதல் பற்றி நம்பர் நடிகை இன்னும் மௌனம் கலைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

என்னது மறுபடியும் முதல்ல இருந்தா?