நடுராத்திரியில், மணக்கும் காமெடி நடிகருடன் நயன நடிகை!


நடுராத்திரியில், மணக்கும் காமெடி நடிகருடன் நயன நடிகை!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தற்போது தன் காமெடியின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை மணக்கச் செய்தவர் அவர். தற்போது அவரே அவர் நடிக்கும் படங்களை தயாரித்து ஹீரோவாக நடித்து வருகிறார்.

இவர் மற்ற கதாநாயகர்களின் படங்களில் அவ்வப்போது காமெடியும் செய்து வருகிறார். சமீபத்தில் கூட இவர்கள் இருவரும் ஒரு திராவிட கட்சியின் வாரிசு நடிகரின் படத்தில் இணைந்து நடித்தனர். இதற்கு முன்பே அந்த நடிகையுடன் நடித்திருந்தாலும் தற்போது கூடுதல் நட்பு கிடைத்துள்ளதாம்.

சமீபத்தில் ஒரு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்த மணக்கும் காமெடி நடிகர் அந்த நடிகையுடன் உள்ள தனது நட்பு பற்றி கூறினாராம். நயன நடிகைக்கு எப்போதெல்லாம் சங்கடம் வருகிறதோ அப்போதெல்லாம் இவரை தொடர்பு கொண்டு பேசுவாராம். இதனால் அவருக்கு மன அமைதி கிடைக்கிறதாம். எனவே இருவரும் நெடுநேரம் பேசிக்கொண்டே இருக்கிறார்களாம்.

பகல் நேரங்களில் இருவரும் அவரவர் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால் நடுராத்திரியில்தான் இவர்கள் அதிகமாக தொடர்பில் இருக்கிறார்களாம்.