ஒரு நாளைக்கு பரோட்டா மாஸ்டருக்கு ரூ.700; நடிகருக்கு ரூ.7 லட்சம்!


ஒரு நாளைக்கு பரோட்டா மாஸ்டருக்கு ரூ.700; நடிகருக்கு ரூ.7 லட்சம்!

நிலா பெயர் கொண்ட கபடிக்குழு படத்தின் மூலம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமானார் அந்த நடிகர். இதற்கு முன்பு நிறைய படங்களில் நடித்திருந்தாலும் இப்படத்தில் அவர் போட்டி போட்டு பரோட்டா சாப்பிட்டது பலரை கவர்ந்தது. அன்று முதல் அந்த பரோட்டாவும் அவருடன் ஒட்டிக் கொண்டது.

இந்நிலையில் வைகைப்புயல் திரையுலக கரையை கடந்தது. மேலும் சின்ன கலைவாணரும் நாட்டுக்கு நல்லது செய்ய கிளம்பியதால் பரோட்டாவுக்கும் மணக்கும் காமெடி நடிகருக்கும் பலத்த போட்டி எழுந்தது. தற்போது இனிமே இப்படித்தான் என மணக்கும் நடிகர் ஹீரோ ரூட்டில் போய்விட்டதால் பரோட்டா காட்டில் நல்ல மழை உருவானது.

முன்பு ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளமாக வாங்கி வந்தாராம். ஆனால் இன்றைக்கு போட்டிக்கு எவரும் இல்லாத்தால் ஒரு நாளைக்கு ரூ 7 லட்சம் வரை கேட்கிறாராம். முன்னணி நடிகர்களும் இவரையே தன் படங்களுக்கு சிபாரிசு செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.