மணக்கும் ஹீரோவை தூக்கி சாப்பிட்ட பரோட்டா நடிகர்!


மணக்கும் ஹீரோவை தூக்கி சாப்பிட்ட பரோட்டா நடிகர்!

ஹீரோக்களின் ‘நண்பேன்டா’வாக வந்து கொண்டிருந்த அந்த மணக்கும் நடிகர் தற்போது இவரே ஹீரோ ஆனதால் பிஸியாகி விட்டார். தான் ஹீரோவாக நடிக்கும் படங்களை தானே தயாரிப்பதால் தயாரிப்பு பணிகளுக்காக நிறைய நேரம் செலவிடுவதால் மற்ற படங்களில் நடிக்க நேரம் கிடைக்கவில்லையாம்.

சில வருடங்களுக்கு முன்னால் இவரின் கால்ஷீட் கிடைத்த பிறகே ஹீரோக்களின் தேதியை கேட்டனர். இப்போது இதில் காலத்திற்கேற்ப நிறைய மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. இவரின் கால்ஷீட்டுக்காக காத்திருந்த இயக்குனர்கள் தங்கள் திசையை இப்போது ‘சூர’காத்து அடிக்கும் நடிகர் பக்கம் திருப்பி விட்டுள்ளனராம்.

‘பரோட்டா’ சாப்பிட்டு பெயர் போன அந்த நடிகரும் மளமளவென படங்களை ஒப்புக் கொண்டு வருகிறார். சமீபத்தில் ‘தல’ நடிக்கும் படத்தில் மணக்கும் காமெடியன் நடிக்கும் கேரக்டரில் இந்த இரண்டு எழுத்து காமெடியன்தான் கமிட் ஆகியிருக்கிறாராம். அது போல சூர்ய நடிகர் நடிக்கும் ஒரு புதிய படத்திலும் இவரே நடிக்கவிருக்கிறாராம்.

வைகைப் புயல் நடிகரும், மணக்கும் காமெடியனும் ஹீரோவானதால் இந்த பரோட்டா நடிகருக்குத்தான் அதிர்ஷ்டம். தற்போது இவர் ஒரு டஜன் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.