மீண்டும் ‘பழைய பாதை’க்கு செல்லும் ‘புதிய பாதை’ ஜோடி!


மீண்டும் ‘பழைய பாதை’க்கு செல்லும் ‘புதிய பாதை’ ஜோடி!

எத்தனையோ படங்களில் பணிபுரிந்திருந்தாலும், தலைக்காட்டியிருந்தாலும் அந்த கிறுக்கல் இயக்குனருக்கு அதுதான் முழு நடிகராக இயக்குனராக முதல் படம். அப்படம் அவரது திரையுலக பயணத்தில் ஒரு ‘புதிய பாதை’ இட்டுத் தந்தது.

திரையில் மட்டுமா? இல்லையில்லை. நிஜத்திலும் திரைமறைவிலும் அவருக்கு அப்படம் ‘புதிய பாதை’தான். படத்தின் நாயகியோடு இல்லற வாழ்வில் இணைந்தார். மகிழ்ச்சியாக குடும்பம் நடத்திய அந்த நட்சத்திர ஜோடிகள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். பல காலமாக பிரிந்து வாழும் இவர்களை இணைக்க இவர்களது குழந்தைகள் பல முயற்சிகளை மேற்கொண்டனர்.

அவர்களின் முயற்சிக்கு பலனாக தற்போது இந்த தம்பதியிடையே கருத்து ஒற்றுமை ஏற்பட்டுள்ளதாம். இதனையடுத்து மீண்டும் புதிய வாழ்வில் இணையவுள்ளனர் ‘பழைய பாதை’யில் பயணித்த அந்த ஜோடிகள்.