முன்னாள் உலக அழகி வரிசையில் புன்னகை இளவரசி!


முன்னாள் உலக அழகி வரிசையில் புன்னகை இளவரசி!

‘நேசிக்கிறேன்’ என்ற பொருள்படும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் அவர். ஆனால் இப்படம் பெரிதாக கைகொடுக்கவில்லை என்றாலும் முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்த படம் இவருக்கு ஆனந்தமாய் அமைந்தது.

இதனை தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் கலக்கிய இவர் உச்ச நட்சத்திரம் தவிர அனைத்து நடிகர்களுடன் நடித்து விட்டார். பிரசன்னமான அந்த நடிகருடன் நடித்தபோது காதல் கொண்டார். பின்னர் திருமணம், குழந்தை என்று செட்டில் ஆன இவர் விளம்பரப் படங்களில் பெரிதும் தலை காட்டினார்.

இந்நிலையில் நேற்று தன் பிறந்தநாளை கொண்டாடிய அவர் பேட்டியளித்திருந்தார். அப்போது… “தன் குழந்தை கொஞ்சம் பெரியவன் ஆனதும் மீண்டும் நடிக்க வருவேன். இப்போது கைக்குழந்தையாக உள்ள அவன் சேட்டைகளை சமாளிக்க வேண்டியள்ளது. எனவே இன்னும் ஒரு சில வருடங்களில் மீண்டும் என்னை திரையில் பார்க்கலாம்” என்றார்.

முன்னாள் உலக அழகி மற்றும் திருமணமான நடிகைகள் தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து கலக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.