ஹீரோ சான்ஸை குப்பையில் போட்ட பரோட்டா நடிகர்!


ஹீரோ சான்ஸை குப்பையில் போட்ட பரோட்டா நடிகர்!

தமிழ் சினிமாவில் காமெடிக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளதை போன்று காமெடி நடிகர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் மொக்கை காமெடிக்கு எல்லாம் சிரிக்க வேண்டிய நிலையில் உள்ளனர் ரசிகர்கள். அதற்கு முக்கிய காரணம் ரசிகர்களை சிரிக்க வைத்த காமெடியன்கள் ஹீரோ வேஷம் கட்டத் துவங்கி விட்டனர்.

ஆனால் தனக்கு வந்த ஹீரோ சான்ஸ் வேடத்தை குப்பையில் போட்டு காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் ஒருவர். அவர்தான் பரோட்டா புகழ் நடிகர். தற்போது இவருக்கு சூறாவளி என்ற பெயரும் வைக்க ஆரம்பித்துள்ளனர் இயக்குனர்கள்.

இந்நிலையில் கவுண்டர், வைகை புயல், சின்ன கலைவாணர், மணக்கும் நடிகர் உள்ளிட்டோர் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கையில் பரோட்டா நடிகரிடம் தெலுங்கில் ஹிட்டடித்த ஒரு காமெடி படத்தின் சிடியை கொடுத்துள்ளார் ஒரு இயக்குனர். இந்தப் படத்தில் நீங்கள் நடிப்பதாக இருந்தால் தயாரிப்பாளர் ரெடி என்றாராம். ஆனால் பரோட்டா நடிகரோ “அண்ணே… எனக்கு காமெடி பண்ணவே நேரம் இல்லை. இதுலயே பிஸியாகத்தான் இருக்கேன். நீங்க வேற ஆள ட்ரை செய்யுங்க… டாங்க் யூ.. பிரதர்” என்றாராம்.

எனவே, அந்த சிடியுடன் மற்ற காமெடி நடிகர்களை தேடிக் கொண்டிருக்கிறாராம் அந்த இயக்குனர்.