மூத்த தலைவரை குறிப்பிட்டாரா தளபதி நடிகர்!


மூத்த தலைவரை குறிப்பிட்டாரா தளபதி நடிகர்!

தளபதி நடிகர் நடித்த பயமுறுத்தும் விலங்கு பெயரை கொண்ட படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டீசர், பர்ஸ்ட் லுக், ட்ரைலர் ஆகியவை சாதனை படைத்து வருகிறது. மேலும் அதிக எண்ணிக்கையில் வெளியாகவுள்ள இப்படம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இவரின் ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. அதில் இடம்பெற்று இருந்த காட்சிகள் குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ளதாம். அதில் பெரிய உருவம் கொண்ட ஆமை ஒன்றை பார்த்து நடிகர் ‘ஐயா’ என்று குறிப்பிடுவது போல் காட்சி இருந்தது. அது ஒரு மூத்த தலைவரை தளபதி நடிகர் அப்படி குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் பற்றிய சில நகைச்சுவையான தாக்குதல் காட்சிகள் உள்ளது என்று கூறப்படுகிறது. என்னவாக இருந்தாலும் இதற்காக விடை சில நாட்களில் கிடைத்து விடப்போகிறது.

அட… அதானே நமக்கேன் இந்த வம்பு?