உங்க பையனுக்கு மார்கெட் இல்ல; 2 கோடி கேட்ட நம்பர் 1 நடிகை


உங்க பையனுக்கு மார்கெட் இல்ல; 2 கோடி கேட்ட நம்பர் 1 நடிகை

இன்று பிரபலமாக இருக்கும் நிறைய இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் போன்றோருக்கு தன் நிறுவனத்தின் மூலம் வாய்ப்பளித்தவர் ஒரு பிரபலமான தயாரிப்பாளர். அண்மைகாலமாக இவர் படங்கள் தயாரிக்கவில்லை. சமீபத்தில் இரண்டு பெரிய நடிகர்களை வைத்து ஒரு பெரிய படத்தை தயாரித்து இருந்தார். படமும் நன்றாகவே கஜானாவை நிரப்பியது எனலாம்.

இந்நிலையில், இவரது இரண்டாவது மகனை வைத்து ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார். அந்த படத்திற்கு தற்போது முன்னணியில் உள்ள நம்பர் நடிகையை நடிக்க கேட்டுஅணுகி இருக்கிறார்.

அதற்கு நடிகையோ, உங்கள் பையனுக்கு மார்கெட் இல்லை. எனக்கு எப்போதும் இருக்கு. படத்தை என்னை வைத்து தான் ஓட்ட வேண்டும். அதனால் ரூ.2 கோடி சம்பளம் கொடுத்தால் நடிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதை கேட்ட தயாரிப்பாளர் ஆடிப்போய்விட்டாராம்.

இதற்கு முன்பே இவர்கள் இருவரும் ஒரு பூச்சி பெயர் கொண்ட படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.