பாபி சிம்ஹா நடிக்கும் ‘பாம்பு சட்டை’ படப்பிடிப்பு துவங்கியது


பாபி சிம்ஹா நடிக்கும் ‘பாம்பு சட்டை’ படப்பிடிப்பு துவங்கியது

பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘பாம்பு சட்டை’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி S தாணு மற்றும் பொருளாளர்  கதிரேசன், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், ரெயான் ராதிகா ஆகியோர் பங்கேற்று பாம்பு சட்டை குழுவினரை வாழ்த்தினர்.

பாபி சிம்ஹா, ராஜேந்திரன் நடித்த முதல் ஷாட்டை க்ளாப் அடித்து துவங்கி வைத்தார் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார். “படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் தொடங்கவிருக்கிறது.

இந்நிலையில், படப்பிடிப்பு பூஜையில் கலந்துக் கொண்ட இயக்குனர் ஆடம் தாசன்,  ‘என்னை இயக்குனராக அறிமுகப்படுத்தும் தயாரிப்பாளருக்கும் எனது குரு இயக்குனர் ஷங்கர் சார் அவர்களுக்கும் எனது நன்றிகள்.” எனக் கூறினார்.

ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டிபன் ஆகியோரின் மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனம் மற்றும் இயக்குனர் மனோபாலா அவர்களின் மனோபாலா பிக்சர் ஹவுஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறார்கள்.