லட்சுமி ராமகிருஷ்ணனை கலாய்க்கும் சிவகார்த்திகேயன்


லட்சுமி ராமகிருஷ்ணனை கலாய்க்கும் சிவகார்த்திகேயன்

ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே போன்ற வித்தியாசமான தமிழ் படங்களை இயக்கியவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். இன்றைய தமிழ் சினிமாவில் அம்மா கேரக்டர்களுக்கு பரிந்துரைக்கப்படும் முக்கியமானவர்களில் இவரும் ஒருவர். தற்போது, இவர் ‘ஜீ’ தமிழ் தொலைக்காட்சியில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

ஒரு பேட்டியின்போது, மறைக்கப்பட்ட கொலை சம்பவம் ஒன்று இந்த நிகழ்ச்சியின் முலம் வெளியுலகுக்கு தெரியவந்தது. இதனால் இந்த நிகழ்ச்சி, மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்களிடம் லட்சுமி ராமகிருஷ்ணனின் அடிக்கடி உபயோகப் படுத்தும் வார்த்தை “என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?” என்ற வசனம், இப்போது இந்த வசனத்தை வைத்து, சிவகார்த்திகேயனுக்காக ஒரு பாடலையே பாடி விட்டார்கள்.

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண் மற்றும் சமுத்திரகனி நடித்து வரும் படம் ‘ரஜினி முருகன்’. பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப்படத்தில் ஒரு பாடல் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?” என்று தொடங்குகிறது. இந்த பாடலுக்கு இசையமைத்ததுடன் டி.இமானே பாடி உள்ளாராம்.

(என்னப்பா இப்படி பண்றீங்களேப்பா???)