இருபது பட பட்ஜெட்டை ரஜினிக்காக கிராபிக்ஸில் கொட்டும் லைகா…!


இருபது பட பட்ஜெட்டை ரஜினிக்காக கிராபிக்ஸில் கொட்டும் லைகா…!

தமிழில் சிறுசிறு பட்ஜெட் படங்களும் பிரம்மாண்ட படங்களும் அவ்வப்போது தயாராகி வருகிறது.

சின்ன பட்ஜெட்டில் உருவாகும் படங்களுக்கு சுமாராக ரூ. 5 கோடி வரை செலவாகிறது. இது ஒரு படத்தின் பட்ஜெட் ஆகும்.

இதுபோல 20 படங்கள் எடுக்க கூடிய அளவிற்கு உண்டாகும் செலவினை ஒரு படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக செலவழிக்கிறதாம் லைக்கா.

அது ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ரஜினியின் 2.ஓ படத்திற்காகத்தான். இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிக்காக மட்டும் ரூ. 100 கோடி வரை செலவிட போகிறார்களாம்.

இதன் கிராஃபிக்ஸ் பணிகளை மட்டும் ஹாலிவுட் படங்களுக்குப் பணிபுரியும் 7 முன்னணி நிறுவனங்கள் செய்து வருகிறது.