அம்மாடி… இவ்ளோ பெருசா…? ‘வெறி’த்தனமான விஜய் ரசிகர்கள்…!


அம்மாடி… இவ்ளோ பெருசா…? ‘வெறி’த்தனமான விஜய் ரசிகர்கள்…!

விஜய்யின் தெறி தரிசனம் கிடைக்க, இன்னும் 50 மணி நேரங்கள் கூட முழுமையாக இல்லாத நிலையில், ரசிகர்கள் பரபரப்பாக காணப்படுகின்றனர்.

இப்படத்தை வரவேற்க தோரணங்கள், போஸ்டர்கள், பேனர்கள், கட் அவுட் பல விதமான ஐடியாக்களுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த விஜய் ரசிகர்கள் இப்படத்தை வரவேற்கும் வகையில் மிகப்பெரிய கட் அவுட்டை வடிவமைத்துள்ளனர்.

இந்த கட் அவுட் 140 அடி உயரமாகும். மிக பிரம்மாண்டமான முறையில் இது தயாரிக்கப்பட்டுள்ளதால், இது நெல்லை பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.