இன்று இரவு ஏழு மணிக்காக காத்திருக்கும் தனுஷ் ரசிகர்கள்..!


இன்று இரவு ஏழு மணிக்காக காத்திருக்கும் தனுஷ் ரசிகர்கள்..!

தங்க மகன் படத்தை தொடர்ந்து இரண்டு படங்கள் தனுஷ் நடிப்பில் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன.

இதில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்திற்கு ’கொடி’ என பெயரிட்டு படப்பிடிப்பை விரைவாக நடத்தி முடித்தனர்.

ஆனால், பிரபு சாலமன் படத்திற்கு பெயரிடாமல் இறுதிக்கட்டப் பணிகளை தொடர்ந்து வருகின்றனர்.

ரயில், மிரட்டு என பல பெயர்கள் பரிசீலனையில் இருந்து வருகிறது என்பது தாங்கள் அறிந்ததே.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று இரவு 7 மணிக்கு வெளியிடவிருப்பதாக அறிவித்துள்ளனர்.

இதனால், வெகுநாட்களாக படத்தின் பர்ஸ்ட் லுக்காக காத்திருந்த தனுஷ் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

பிரபு சாலமன் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷ் உடன், கீர்த்தி சுரேஷ், பூஜா ஜாவேரி, கணேஷ் வெங்கட்ராமன், ஹரீஷ் உத்தமன், ராதாரவி, தம்பி ராமையா, ஆர். வி. உதயகுமார், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இமான் இசையமைத்துள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.