அடுத்த அதிர்ச்சி… டிவி தொகுப்பாளர் நிரோஷா தற்கொலை..!


அடுத்த அதிர்ச்சி… டிவி தொகுப்பாளர் நிரோஷா தற்கொலை..!

டிவி தொகுப்பாளரும் நடிகருமான சாய் பிரசாந்த் ஓரிரு தினங்களுக்கு முன் விஷம் அருந்தி தற்கொலை செய்துக் கொண்டார்.

அந்த அதிர்ச்சியில் இருந்து டிவி நடிகர்கள் முழுமையாக மீளாத நிலையில், இன்று டிவி தொகுப்பாளர் நிரோஷா (வயது 23) மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

தன் பாய் பிரண்டுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த போது இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. அச்சமயமே அந்த கேமராவை ஆப் செய்யாமல் அப்போதே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கனடாவில் இருந்த அந்த பாய் பிரண்ட் அப்பெண்ணின் உறவினருக்கு போன் செய்த பின்னரே அங்கு உறவினர்கள் மற்றும் போலீஸ் விரைந்துள்ளனர். ஆனால் அதற்கு முன்பே நிரோஷாவின் உயிர் பிரிந்து விட்டது.

இவர் தெலுங்கு டிவி சேனலான ஜெமினி மியூசிக்கில் தொகுப்பாளினியாக வேலை பார்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.