சூர்யா-ஜிவி பிரகாஷுக்கு வந்த நிலைமை… தடுப்பது யாரோ..?


சூர்யா-ஜிவி பிரகாஷுக்கு வந்த நிலைமை… தடுப்பது யாரோ..?

கடந்த மே 13ஆம் தேதி ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீதிவ்யா, ஊர்வசி, டிபி கஜேந்திரன், திருமுருகன் உள்ளிட்டோர் நடிப்பில் பென்சில் படம் வெளியானது.

மணி நாகராஜ் இயக்கியிருந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் இந்த படம் வெளியாகிய மறுநாளே திருட்டி சிடி வெளியாகியிருப்பது படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எனவே, படத்தின் நாயகனும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அதன்பின்னர் அவர் கூறியதாவது…

“நிச்சயமாக இது தியேட்டர்களில்தான் படமாக்கப்பட்டுள்ளது. அவர்களின் வழிகாட்டுதல் இல்லாமல் திருட்டி விசிடியை உருவாக்கி இருக்க முடியாது. இதனை தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும்.

வெளிநாட்டு உரிமை மூலமாக திருட்டு சிடி வெளியாக வாய்ப்புள்ளது. எனவே, கியூப் வசதியுடன் வெளிநாட்டு உரிமையைக் கொடுத்தால் திருட்டு விசிடியை தடுக்கலாம்” எனக் கூறினார்.

இதுபோன்று சில தினங்களுக்கு முன்பு, சூர்யா தயாரித்து நடித்த 24 படத்தின் சிடியும் வெளியானது. இது பிரபலமான பிவிஆர் தியேட்டர்களில் படமாக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திருட்டு விசிடியால், சூர்யா மற்றும் ஜிவி. பிரகாஷ் படங்களுக்கு ஏற்பட்ட நிலைமை திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை யார் மூலம் எப்படி தடுப்பது..? என தெரியாமல் திரையுலகினர் தவித்து வருகின்றனர்.