‘ஓ காதல் கண்மணி’ ஹீரோவை ஏமாற்றிய பெண்மணிகள்!


‘ஓ காதல் கண்மணி’ ஹீரோவை ஏமாற்றிய பெண்மணிகள்!

மலையாளத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் ‘பெங்களூர் டேஸ்’. அஞ்சலி மேனன் எழுதி இயக்கியிருந்த இப்படத்தில் துல்கர் சல்மான்,  பஹத் பாசில், நிவின் பாலி, நஸ்ரியா நஸீம், பார்வதிமேனன் ஆகியோர் நடித்திருந்தனர். திருமணத்திற்கு முன்பு உள்ள நட்பையும் அதன் பிறகு உள்ள நட்பையும் மையப்படுத்தி கதை அமைக்கப்பட்டிருக்கும். நண்பர்களுடனும் குடும்பத்துடனும் பார்க்கத் தகுந்த வகையில் திரைக்கதையை அமைத்திருந்தார் இயக்குனர்.

தற்போது இப்படம் தமிழில் தயாராகி வருகிறது. தமிழ் ரீமேக்கில் ஆர்யா, ஸ்ரீதிவ்யா, பாபி சிம்ஹா, தெலுங்கு நடிகர் ராணா டக்குபட்டி ஆகியோர் நடிக்கின்றனர். ஆனால் தற்போது நாங்கள் சொல்ல போகும் செய்தி இது பற்றியது அல்ல. ஒரிஜினல் மலையாளப் படத்தில் நடித்த நடிகர்களைப் பற்றிதான்.

‘பெங்களூர் டேஸ்’ படத்தின் வெற்றி விழா அண்மையில் நடைபெற்றது. உடன் நடித்தவர்களை சந்திக்கலாம் என்று எண்ணி முதல் நபராக வந்திருக்கிறார் படத்தின் நாயகன் துல்கர் சல்மான். இவர் நடிகர் மம்மூட்டியின் மகன் என்பதும் ‘வாயை மூடி பேசவும்’, ‘ஓ காதல் கண்மணி’ போன்ற தமிழ் படங்களில் நடித்திருக்கிறார் என்பதும் தாங்கள் அறிந்ததே.

விழாவுக்கு வந்திருந்த துல்கருக்கு பெருத்த ஏமாற்றம்தான் காத்திருந்தது. படத்தில் இவருடன் நடித்த  நிவின் பாலி மட்டுமே வந்திருந்தாராம். படப்பிடிப்பு சமயத்தில் நண்பர்கள் போல பழகினோம். விழாவில் எல்லோரையும் சந்திக்கலாம் என்று நினைத்து வந்தால் மற்றவர்கள் ஏமாற்றி விட்டார்களே என துல்கர் மிகவும் வருத்தப்பட்டாராம்.

விடுவாரா துல்கர்? படத்தில் தன்னுடன் நடித்த பஹத் பாசில், நஸ்ரியா, நித்யா மேனன், பார்வதி உள்ளிட்ட அனைவருக்கும் “இன்ன இங்ஙன பட்டிச்சுல்ல?” (அப்படின்னா தமிழ்ல என்னைய இப்படி ஏமாத்திட்டீங்களே?)  என்று மின்னஞ்சலில் தகவல் அனுப்பியுள்ளாராம். அதுக்காச்சும் ரிப்ளை வந்துச்சா துல்கர் சார்?

என்னம்மா இப்படி பண்ணீட்டீங்களேம்மா?