தனுஷுடன் இணைந்த அதே 3 பெண்கள் அடுத்து விஜய்யுடன்!


தனுஷுடன் இணைந்த அதே 3 பெண்கள் அடுத்து விஜய்யுடன்!

‘அனேகன்’ படத்தை தொடர்ந்து தற்போது ‘மாரி’ படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இதனிடையே  ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தை இயக்கிய வேல்ராஜ் உடன் மீண்டும் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இப்புதிய படத்தினை தனுஷின் ஒண்டர்பார் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

சமீபத்தில் தனுஷ் 10ஆம் வரை படித்த பள்ளியில் இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை நடத்தினர். இதுவரை பெயரிடப்படாத இப்படத்தில் தனுஷ் ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்து வருகின்றனர். இப்படத்தில் தனுஷின் தாயாக ராதிகா நடிக்கிறார். தனுஷின் தந்தையாக ஒரு பிரபல இயக்குனர் நடிக்கக்கூடும் எனத் தெரிகிறது. பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் ‘ராஜா ராணி’ படத்தை இயக்கிய அட்லி படத்தில் விஜய் அடுத்து நடிக்கவிருக்கிறார். கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.பி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதுவரை பெயரிடப்படாத இப்படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடிக்கவிருக்கிறார்கள். தனுஷ் படம் போலவே விஜய் படத்திலும் இந்த இரண்டு ஹீரோயின்களை தொடர்ந்து  ராதிகாவும் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.