சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்வீட் ஸ்டால் ஆன கதை…!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்வீட் ஸ்டால் ஆன கதை…!

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இருக்கும் வெறித்தனமாக ரசிகர்கள் பற்றி இந்தியா அறிந்ததே. பாலிவுட் நட்சத்திரங்கள் கூட, ரஜினியின் புகழ் பாடி வருகின்றனர்.

ரஜினியின் படங்கள் வெளிவரும்போது ஏதாவது ஒரு புதுமையை செய்து பொதுமக்களை ரசிகர்கள் அசத்தி கொண்டிப்பார்கள்.

விரைவில் கபாலி படம் வெளியாகவுள்ள நிலையில், சென்னை டிடிகே சாலையில் உள்ள ஒரு தனியார் பேக்கரி கடையில் ரஜினியின் ஆறு அடி உருவ சிலையை வடிவமைத்துள்ளனர்.

இதை முழுக்க முழுக்க 600 கிலோ சாக்லேட்டில் உருவாக்கியுள்ளனர்.

இந்த ஸ்வீட்டான ரஜினி சிலையைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் அந்த கடை முன் குவிந்து வருகிறார்களாம். மேலும் பலர் செல்ஃபி எடுத்து தங்கள் உறவினர்கள் நண்பர்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.

இதே பேக்கரி நிறுவனம் இதற்கு முன் மகாத்மா காந்தி, டாக்டர் அப்துல் கலாம் ஆகியோரது சிலைகளைகளையும் சாக்லேட்டில் உருவாக்கி வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.