ஏப்ரல் 8இல் இத்தனை படங்களும் ரிலீஸ் ஆக விஜய்தான் காரணமா..?


ஏப்ரல் 8இல் இத்தனை படங்களும் ரிலீஸ் ஆக விஜய்தான் காரணமா..?

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். அன்றைய தினம் படங்கள் ரிலீஸ் ஆவதால், தங்களது விடுமுறை நாட்களை சந்தோஷமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று ஏப்ரல் 8ஆம் தேதி, கிட்டதட்ட எட்டு தமிழ் படங்கள் வெளியாகியுள்ளது.

ஜித்தன் 2, அவன் அவள், கிடா பூசாரி மகுடி, ஓய், முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்), டீ கடை ராஜா, ஆதிக்கோட்டை, ஆய்வுக்கூடம் உள்ளிட்ட படங்கள் வெளியானது.

இதற்கு காரணம் தெறி படம் தான் என கூறப்படுகிறது. அடுத்த வாரம் விஜய்யின் தெறி வெளியாகிவிட்டால், கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு தியேட்டர் கிடைக்காது.

எனவே, இதுதான் சரியான சமயம் என தயாரிப்பாளர்கள் நினைத்துவிட்டதால் ஒரே நாளில் இத்தனை படங்களை ரிலீஸ் செய்துவிட்டார்களாம்.

மேலும் சூர்யாவின் 24, ரஜினியின் கபாலி ஆகிய படங்களும் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.