விஜய்-சூர்யாவின் மோதலுக்கு காத்திருக்கும் ரஜினிகாந்த்!


விஜய்-சூர்யாவின் மோதலுக்கு காத்திருக்கும் ரஜினிகாந்த்!

இந்தாண்டு கமல், அஜித், விக்ரம் படங்கள் பக்கா மாஸ் காட்டிவிட்டதால் இவர்களுக்கு எதிரணியுள்ள ரஜினி, விஜய், சூர்யா ரசிகர்கள் செய்வதியாமல் காத்திருந்தனர். ரஜினியின் எந்த படங்களும் இந்தாண்டு ரிலீஸாகவில்லை. விஜய்யின் புலி, சூர்யாவின் மாஸ் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

எனவே ரசிகர்களின் காத்திருப்புக்காகவே ரஜினி, விஜய், சூர்யா படங்கள் கோடை விடுமுறையில் கலக்க வருகின்றன.
விக்ரம் குமார் இயக்கி, சூர்யா நடித்துள்ள 24 படத்தின் இறுதிகட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தை தமிழ் புத்தாண்டு அதாவது ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட இருக்கின்றனர்.

தாணு தயாரித்து வரும் ரஜினியின் ’கபாலி’யும், விஜய்யின் ’தெறி’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இவை இரண்டும் ஒரே தயாரிப்பாளரின் படம் என்பதால் இரண்டையும் வெவ்வேறு தினங்களில் வெளியிட இருக்கிறார்களாம்.

எனவே, ‘தெறி’ படத்தை தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிட இருக்கிறார்களாம். இதற்கு முன்பே விஜய், சூர்யாவின் ‘அழகிய தமிழ்மகன்-வேல்’, ‘வேலாயுதம்-ஏழாம் அறிவு’ ஆகிய படங்கள் ஒரே நாளில் மோதியது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் மோதலுக்கு பிறகு ரஜினியின் ‘கபாலி’ படத்தை மே 1ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.