அஜித்துக்கு ஒண்ணுன்னா சித்தார்த்துக்கு இன்னொன்னு??


அஜித்துக்கு ஒண்ணுன்னா சித்தார்த்துக்கு இன்னொன்னு??

‘ஜிகர்தண்டா’விற்குப் பிறகு வசந்தபாலன் இயக்கத்தில் ‘காவியத்தலைவன்’ மற்றும் பிரசாத் ராமர் இயக்கத்தில் ‘எனக்குள் ஒருவன்’ என இரு படங்கள் வெளியானது சித்தார்த்துக்கு. இதில் சித்தார்த்தின் நடிப்பு பேசப்பட்டாலும் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

சுந்தர் சி இயக்கத்தில் ‘அரண்மணை 2’ படத்தில் நடித்து வரும் சித்தார்த் இப்படத்தை மலைபோல நம்பியிருக்கிறார்.. சித்தார்த்துடன் த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பஜ்வா, சூரி, சுந்தர் சி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

வருகிற 2016ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் ரசிகர்களை பயமுறுத்த வருகிறது ‘அரண்மனை 2’. தொடர்ந்து ‘ஜில் ஜங் ஜக்’ என்ற படத்தை தயாரித்து அதில் நடித்தும் வருகிறார் சித்தார்த். இப்படத்தில் இடம்பெற்ற ‘சூட் தி குருவி’ (Shoot the Kuruvi) என்ற பாடல் அண்மையில் வெளியானது. விஷால் சந்திரசேகர் இசையில் உருவான இப்பாடல் பெரும் ஹிட்டடித்ததை தொடர்ந்து இப்படத்தின் மற்றொரு பாடலான ‘டோமரு லார்டு’ என்ற பாடலை இன்று ஜெயம் ரவி வெளியிடவுள்ளார்.

சமீபத்தில் அஜித்தின் ‘வேதாளம்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆலுமா டோலுமா’ பாடல் செம ஹிட்டடித்தது. இன்று வெளியாகவுள்ள ‘டோமரு லார்டு’ பாடலும் இதே வகையை சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.