நடிகர் விவேக்கை திட்டிய அப்துல் கலாம்!


நடிகர் விவேக்கை திட்டிய அப்துல் கலாம்!

‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தில் கே. பாலசந்தரால் அறிமுகப்படுத்தபட்டவர் விவேக். 1987ஆம் ஆண்டு வெளியான இப்படம் தொடங்கி தன் திரையுலக பயணத்தை தொடர்ந்து வருகிறார். விஜய்-சூர்யா முதன்முறையாக இணைந்த நேருக்கு நேர் படம் இவரது 50வது படமாக அமைந்தது.

தற்போதுவரை 200 படங்களுக்கு மேல் நடித்துள்ள விவேக்கின் ‘பாலக்காட்டு மாதவன்’ அடுத்த ஜூலை மாதம் வெளியாகவுள்ளது.  விவேக் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் சோனியா அகர்வால், ‘செம்மீன்’ ஷீலா ஆகியோர் நடித்துள்ளனர். முன்பெல்லாம் வருடத்திற்கு பத்து பதினைந்து படங்களில் நடித்துக்கொண்டிருந்த இவர் தற்போது ஓரிரு படங்களில் மட்டுமே தலைகாட்டி வருகிறார்.

இதற்கிடையில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கேட்டுக் கொண்டதற்காக ‘க்ரீன் க்ளோப்’ என்ற அமைப்பின் மூலம் தமிழகம் முழுவதும் 27 லட்சம் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இவரது இலக்கு ஒரு கோடி மரக்கன்றுகளை நடவேண்டும் என்பதுதான். இவ்வாறாக பொதுவாழ்வில் ஈடுப்பட்டதால் சினிமாவில் கவனம் செலுத்தமுடியாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் இதனையறிந்த அப்துல்கலாம் விவேக்கை தொலைபேசியில் அழைத்துள்ளார். “நான் கேட்டுக்கொண்டதற்காக செய்துவருவது மகிழ்ச்சி. அதற்காக குடும்பத்தையும் தொழிலையும் கவனிக்க வேண்டாமா? தங்களின் 30 சதவீத உழைப்பை பொதுவாழ்க்கைக்கு செலவிடுங்கள். ஆனால் மீதமுள்ள 70 சதவீத உழைப்பை தொழிலில் காட்டுங்கள். குடும்பத்தை காப்பாற்றுங்கள். சினிமாவில் கவனம் செலுத்துங்கள். உங்கள் ரசிகர்களை மகிழ்வியுங்கள்” என்று அன்பாக திட்டினாராம் அப்துல்கலாம்.

இதனை மகிழ்ச்சியோடு தெரிவித்த விவேக், அவர் சொன்னதுபோலவே இனி சினிமாவில் ஆர்வம் காட்டி படங்களில் நடிக்கவுள்ளாராம்.

விவேக் சார்… ரியலி யூ ஆர் கிரேட்…