ஜுன் 3 முதல்… விஜய்-எமி கூட்டணியில் உருவான டீசர்…!


ஜுன் 3 முதல்… விஜய்-எமி கூட்டணியில் உருவான டீசர்…!

ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து, முன்னணி நடிகையாக வலம் வருகிறார் எமி ஜாக்சன்.

ஷங்கர் இயக்கும் 2.0 படத்தில் பிஸியாக இருந்த நிலையிலும், தன்னை அறிமுகப்படுத்திதிய இயக்குனர் விஜய் இயக்கத்தில் காந்தா படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.

பிரபுதேவா, தமன்னா, சோனு சூட் இணைந்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையைமைத்துள்ளார். பின்னணி இசையை தமன் அமைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வரும் இப்படத்தை பிரபுதேவா மற்றும் கோனா வெங்கட் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை வருகிற ஜுன் 3ஆம் தேதி வெளியிட இருக்கிறார்களாம்.