‘சேலையில வாங்க… தமிழ்ல பேசுங்க…’ அபிராமி ராமநாதன் அதிரடி..!


‘சேலையில வாங்க… தமிழ்ல பேசுங்க…’ அபிராமி ராமநாதன் அதிரடி..!

ஜ்யோ ஸ்டார் என்டர்பிரைசஸ் சார்பாக கோட்டீஸ்வர ராஜு மற்றும் இவரது மனைவி ஹேமா இணைந்து தயாரித்திருக்கும் படம் ஆகம் (ஆகம் என்றால் வந்தடைதல் என்று பொருள்).
இதில் இர்ஃபான், தீக்ஷிதா, ஜெயப்பிரகாஷ், ஒய் ஜி மகேந்திரன், ரியாஸ்கான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துக் கொண்ட அபிராமி ராமநாதன் பேசியதாவது…

“நிகழ்ச்சி தொகுப்பாளினி என்னை பேச அழைக்கும் நடிகர் என்று கூறினார். நானும் ஒரு படத்தில் நடித்துள்ளேன். எனவே, அவர் சொன்னது சரிதான்.

எட்டு வயது சிறுவனாக இருக்கும் போது நேரு என்ற படத்தில் சிறிய வேடத்தில் நடித்தேன். அதில் ஒரு காட்சியில் 5 வயது சிறுமியின் கையை பிடித்துக் கொண்டிருந்தேன். அதைப் பார்த்த என் அம்மா, இவன் இப்பவே பொம்பளப் புள்ள கையை பிடிச்சுகிட்டு நடிக்குறான். இனிமே இவன நடிக்க விடக் கூடாது’ என்று சொன்னார். அன்று முதல் நடிக்க விடவில்லை.

இப்போ தியேட்டர் வச்சிருக்கேன். படங்களை விநியோகம் செய்றேன். படம் தயாரிக்கிறேன். ஆகம் படத்துல நிறைய புதுமுகங்கள் இருக்காங்க. அவங்க எல்லாம் ஜெயிக்கணும்னா இந்த ஆகம் நல்லா ஓடணும்.

இந்தப் படத்துல நடிச்ச நடிகைகள் எல்லாம் இங்க ஆங்கிலத்துல பேசினாங்க. தமிழ் தெரிஞ்சும் ஏன் அப்படி பேசுறாங்க தெரியல. இனியாவது தமிழ்ல பேசுங்க.

இந்த தொகுப்பாளினி அழகா சேலை கட்டி வந்திருக்காங்க. ஆனா மத்தவங்க எதையோ போட்டு வந்து இருக்காங்க. சேலை கட்டி வந்தால் என்ன?”

என்று அதிரடியாக பேசினார் அபிராமி ராமநாதன்.