ஒரே நாளில் ரெண்டு படங்கள் ரிலீஸ்… பரவசத்தில் பால சரவணன்..!


ஒரே நாளில் ரெண்டு படங்கள் ரிலீஸ்… பரவசத்தில் பால சரவணன்..!

டார்லிங், குட்டி புலி, திருடன் போலீஸ் உள்ளிட்ட படங்களின் மூலம் தனது கலகல பேச்சால் ரசிகர்களை கவர்ந்தவர் பால சரவணன்.

இந்நிலையில் இவரது நடிப்பில் வளர்ந்துள்ள கோ 2 மற்றும் உன்னோடு கா ஆகிய படங்கள் மே 13ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்த படங்கள் குறித்து பாலசரவணன் கூறியதாவது…

“பல திறமைகளை வைத்துள்ள பிரகாஷ்ராஜ் சாருடன் கோ 2 படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் தேசிய விருது பெற்ற பாபி சிம்ஹாவுடன் கை கோர்த்ததை பெருமையாக கருதுகிறேன்.

இந்த படத்தில் நடிப்பதற்கு முன், அரசியலை பற்றி அவ்வளவு விவரம் தெரியாது. ஆனால் இப்பொழுது கொஞ்சம் நஞ்சம் புரிந்துக் கொண்டேன்.” என்றார்.

 

Balasaravanan

 

மேலும் உன்னோடு கா படம் குறித்து கூறியவதாது…

அபிராமி ராமநாதன் கதை எழுதி தயாரித்திருக்கும் இந்த படத்தை புதுமுக இயக்குனர் RK இயக்கியுள்ளார். இந்த படத்தில் மிஷா கோஷல்தான் என் ஜோடி.

இதில் பிரபு சார் மற்றும் ஊர்வசி மேடமுடன் இணைந்து நடித்ததை என்னால் எப்பவும் மறக்க முடியாது.

 

bala saravana

 

இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாவது நிச்சயம் எனக்கு திருப்புமுனையாக இருக்கும் என நம்புகிறேன்” என்கிறார் பால சரவணன்.