‘சிவகார்த்திகேயனுடன் நடிப்பது சவாலானது…’ – பஹத் பாசில் அதிரடி..!


‘சிவகார்த்திகேயனுடன் நடிப்பது சவாலானது…’ – பஹத் பாசில் அதிரடி..!

மலையாள நடிகைகளுக்கு மட்டுமில்லாமல், மலையாள நடிகர்களுக்கும் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு உள்ளது.

மம்மூட்டி மோகன்லால், கலாபவன் மணி ஆகியோரை தொடர்ந்து, பிருத்விராஜ், துல்கர் சல்மான், நிவின் பாலி ஆகியோர் தமிழக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளனர்.

இந்நிலையில் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாராவுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார் மலையாள நடிகர் பஹத் பாசில்.

இவர் நடித்த மலையாள படமான ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ சென்னையில் ஐம்பது நாட்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா பிரவேசம் குறித்து பஹத் கூறும்போது….

‘தமிழ் படங்கள் மீது எனக்கு எப்போதும் அலாதி ப்ரியம் உண்டு. ‘தனி ஒருவன்’ படம் பார்த்தப் பின்னர் நான் என்னையே மறந்து விட்டேன். என்னை பொறுத்த வரை இயக்குனர் மோகன் ராஜாவின் உழைப்பு மேல் நாட்டு இயக்குனர்களுக்கு நிகரானது.

மிகக் குறுகியக் காலத்தில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சிவகார்த்திகேயன் உடன் நடிப்பது மிக சவாலானது” என்று கூறினார்.

இவர் இப்படத்தில் நெகட்டிவ்வான கேரக்டர் ஏற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.