காமெடி கிங் கவுண்டமணி பிறந்தநாள் ஸ்பெஷல்…!


காமெடி கிங் கவுண்டமணி பிறந்தநாள் ஸ்பெஷல்…!

எம்ஜிஆர், ரஜினி முதல் இன்றைய சிம்பு வரை நான்கு தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர் கவுண்டமணி.

இன்று மே 25ஆம் தேதி அவர் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மன்னிக்கவும் அவர் பிறந்தநாளை கொண்டாடுவதில்லை. அவது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பாரதிராஜா இயக்கிய ’16 வயதினிலே’ படத்தில் கமல், ரஜினியுடன் நடித்த பின் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார்.

இப்போதும் நம் நண்பர்களில் யாராவது ஒருவர் மற்றவரை போட்டுக் கொடுத்து விட்டால், ”பத்த வெச்சுட்டயே பரட்ட” என்று இப்படத்தில் கவுண்டமணி சொன்ன வசனத்தையே இளைஞர்கள் கூறிவருகின்றனர்.

இதுமட்டுமில்லாமல் இன்று பிரபலமாகும் இருக்கும் ஒரு சில காமெடியன்கள் கூட இவரது ஸ்டைலையே பின்பற்றி வருகின்றனர்.

இவரது கூட்டணியில் செந்தில் இணைந்துவிட்ட பின் கிட்டதட்ட நூற்றுக்கணக்கான படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

இவரது நையாண்டி பேச்சும், எகத்தாளமான பேச்சும் இன்றைய குழந்தைகள் வரை பிரபலம்.

பல நடிகர்களுடன் நடித்தாலும் இவருடன் சத்யராஜ் இணைந்துவிட்டால் அந்த படம் சூப்பர் ஹிட்தான்.

சுமாரான பல படங்கள் வெற்றியடைய இவர்தான் காரணம் என்று சொன்னால் அது மிகையல்ல.

கடந்த சில பத்து வருடங்களாக படங்களில் நடிப்பதை குறைத்து வந்தார் கவுண்டர்.

ஆனால் தமிழ் சினிமாவில் காமெடிக்கு பஞ்சம் ஏற்படுள்ளதை கவனித்த இவர், மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார்.

கடந்தாண்டு ’49ஓ’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து அரசியல்வாதிகளின் சுயரூபத்தை உணர்த்தியிருந்தார்.

தற்போது இவரது நடிப்பில் ‘எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’, ‘வாய்மை’ உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

மீண்டும் அதே பழைய நக்கல் நய்யாண்டியுடன் கவுண்டமணி வலம் வர சினி காஃபி சார்பாக வாழ்த்து வரவேற்கிறோம்.