தல வழியில் செல்லும் அஜித் மனைவியின் ரசிகன் ஜெய்..!


தல வழியில் செல்லும் அஜித் மனைவியின் ரசிகன் ஜெய்..!

‘வலியவன்’ தந்த அடியில் இருந்து மீண்டு ‘புகழ்’ பெற நினைத்து நாளை திரையரங்குகளுக்கு வருகிறான் புகழ் நாயகன் ஜெய். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சுரபி நடித்துள்ளார்.

இந்நிலையில் தன் பர்சனல் பக்கங்கள் குறித்து பக்காவாக பேட்டியளித்துள்ளார் ஜெய். அதில் அவர் கூறியதாவது…

புகழ் படம் நிச்சயம் ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும். சுரபி அமைதியான பெண். அதிகம் பேசவே மாட்டார்.

நான் நடிகை ஷாலினியின் தீவிர ரசிகன். அவருடைய காதலுக்கு மரியாதை, அலைபாயுதே படங்களில் அவரின் யதார்த்த நடிப்பு மிகவும் பிடிக்கும். அவர் தல யை திருமணம் செய்து கொண்டது ரொம்ப சந்தோஷம்.

எனக்கு எப்போதும் கார் ரேசில் ரொம்ப ஆர்வம் உண்டு. கடந்த 3 வருடங்களாக கார் ரேசில் பங்கேற்று வருகிறேன். ஆரம்பத்தில் பண நெருக்கடி இருந்தது. தற்போது தயாரிப்பாளர் வருண் மணியன் உதவி வருகிறார்.

இவ்வாறு பேட்டியில் கூறியிருந்தார் ஜெய்.

நடிகர் அஜித்தும் இதுபோன்ற ரேஸ்களில் கவனம் செலுத்தி வருவது தாங்கள் அறிந்ததே.