நயன்தாரா-அஞ்சலி… திருமணம்-விவாகரத்து… விவரமான ஜெய்..!


நயன்தாரா-அஞ்சலி… திருமணம்-விவாகரத்து… விவரமான ஜெய்..!

திருமணம் என்னும் நிக்காஹ், வலியவன் ஆகிய படங்களை தொடர்ந்து, ஜெய் நடிப்பில் நாளை மறுநாள் வெளியாகவுள்ள படம் புகழ்.

இப்படத்தில் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் இளம் அரசியல்வாதியாக இவர் நடித்துள்ளார். தேர்தல் சமயத்தில் இப்படம் வெளியாகவிருப்பதால் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் இவரது சமீபத்திய பேட்டியில் காதல், திருமணம் உள்ளிட்டவைகள் பற்றி இவர் கூறியதாவது…

“ஆறு மாதங்களுக்கு முன்புதான் அஞ்சலியை சந்தித்தேன். எனக்கும் அஞ்சலிக்கும் ஒரு நல்ல நட்பு இருந்து வருகிறது. அது காதலாக மாறினாலும் மாறலாம்.

அஞ்சலியை போல் நயன்தாராவும் எனக்கு ஒரு நல்ல தோழிதான். அடிக்கடி போனில் பேசிக் கொள்வோம். நான் குழப்பமாக இருக்கும்போது நிறைய ஆலோசனைகளை கூறி என்னை தெளிவுப்படுத்தியிருக்கிறார்.

இன்றைய காலகட்டத்தில் நிறைய விவாகரத்து நடக்கிறது. காதல் திருமணம் செய்துக் கொண்டவர்கள் கூட விவாகரத்து கேட்கின்றனர்.

இதை எல்லாம் பார்க்கும்போது திருமணத்தில் எனக்கு நம்பிக்கையே இல்லாமல் போய்விட்டது.

உண்மையான காதல், அன்பு இருந்தால் சேர்ந்து வாழ்வதில் தப்பு இல்லை”

இவ்வாறு கூறினார் ஜெய்.