ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி வரிசையில் ஜெய்…!


ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி வரிசையில் ஜெய்…!

காக்கி சட்டை மீது நம் கதாநாயகர்களுக்கு அப்படி என்னதான் ஈர்ப்போ தெரியவில்லை? ஒரு படத்திலாவது காக்கி சட்டை போட்டு கெத்து காட்ட ஆரம்பித்து விடுகின்றனர்.

ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்டவர்கள் பல படங்களில் நடித்த பிறகு அணிந்த காக்கி சட்டையை இன்றைய இளம் நாயகர்கள் பத்து-இருபது படங்களை தாண்டுவதற்குள் அணிந்து பார்க்கின்றனர்.

காக்கி சட்டை படத்தில் சிவகார்த்திகேயனும், தனி ஒருவன் படத்தில் ஜெயம் ரவியும், சேதுபதி படத்தில் விஜய் சேதுபதியும் போலீஸாக நடித்திருந்தனர்.

தற்போது இவர்களின் வரிசையில் ஜெய்யும் இணையவிருக்கிறார்.

திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பாக சி.வி.குமார் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் ஜெய் போலீஸாக நடிக்கிறாராம். இப்படத்தை ஒரு புதிய இயக்குனர் இயக்குவார் என கூறப்படுகிறது.

மணிமாறன் இயக்கியுள்ள ஜெய்யின் ‘புகழ்’ விரைவில் ரிலீஸாகவுள்ளது.