அது போன வருஷம்; இந்த வருஷம் முடியாது… கமலின் புது முடிவு..!


அது போன வருஷம்; இந்த வருஷம் முடியாது… கமலின் புது முடிவு..!

அண்மையில் கமல் நடிக்கும் சபாஷ் நாயுடு படத்தின் தொடக்கவிழா நடைபெற்றது.

ராஜீவ்குமார் இயக்கவுள்ள இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், ஸ்ருதிஹாசன், பிரம்மானந்தம், சித்திக் உள்ளிட்டோர் இதில் நடிக்கின்றனர். இசை இளையராஜா.

விரைவில் தொடங்கவுள்ள இதன் 75% படப்பிடிப்பை அமெரிக்காவில் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

ஜூன் மாதத்திற்குள் அங்கு முடித்துவிட்டு, மீதமுள்ள காட்சிகளை இந்தியாவில் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் தூங்காவனம் இயக்குனர் ராஜேஷ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறாராம் கமல்.

இவை இரண்டையும் கமல் இவ்வருடத்திற்குள் முடித்து விட்டாலும் போஸ்ட் புரொடக்ஷன் உள்ளிட்ட மற்ற பணிகள் தாமதம் ஆகும் என்பதால் ஒரு படம் மட்டுமே வெளியாகும் என கூறப்படுகிறது.

ஆனால் கடந்த வருடம் மட்டும் உத்தமவில்லன், பாபநாசம், தூங்காவனம் ஆகிய மூன்று படங்களை கொடுத்தார் கமல் என்பது குறிப்பிடத்தக்கது.